முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறாக பேசிய பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு!
பார்மர் (06 பிப் 2023): : ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் மத வெறுப்பு மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக பதஞ்சலி நிறுவன உரிமையாளரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 அன்று துறவிகள் கூட்டத்தில் பாபா ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் பக்கம் திரும்புவதாகவும், இந்துப் பெண்களைக் கடத்துவதாகவும் ராம்தேவ் பேசியுள்ளார். மேலும் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கும் அதே வேளையில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்…