கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போமா..?

INNERAM.com 2
Share this News:

சென்னை (20ஜூலை,2020):

“என்னப்பா இது டெய்லி வீட்டுக்கு ஆவின் பால் தானே போடுவே, இதென்ன அதானி பால்?

“மன்னிக்கவும் சார் ஆவினை அதானி வாங்கிட்டாங்க..!:

———–

“என்னப்பா தி இந்து தமிழ் நாளிதழ் நாங்க வாங்கறதில்லையே இப்போ எதுக்கு அதைக் கொண்டு வந்து போடுற?”

“விஷயம் தெரியாதா சார் ஹிந்துவை இப்போ ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி வாங்கிடுச்சு இனி நாட்டில் இந்த ஒரே நியூஸ் பேப்பர் மட்டும் தான்.!”

————-

Arasu Cable
Arasu Cable

“கேபிள்காரரே வெறும் சங்கரா டிவி.. காசி யாத்திரை.. தியானம்.. யோகா.. கோவில்கள்.. பசுமாடு.. கோமியம்.. ஹோமம்.. அபிஷேகம்.. கோவில்கள் குடமுழுக்கு, இராசிபலன், ஜோசியம்.. கதாகாலட்சேபம் இராமாயணம், மஹாபாரதம் நிகழ்ச்சியா வருதே..! விஜய் டிவி, சன் டிவி எல்லாம் ஏன் வரலை?”

“கேபிள் மொத்தத்தையும் பாபா இராம்தேவ் வாங்கிட்டாரும்மா இனி இந்தச் சானல்கள் மட்டும் தான் வரும்.. இந்தக் கேபிள் கனெக்ஷனை நீங்க கட் பண்ணாலும் மாத வாடகை கட்டாயம் உண்டு அப்புறம் உங்க இஷ்டம்.!”

————-

“இங்க இருந்த உழவர் சந்தை எங்கங்க..?”

“அடடா விஷயம் தெரியாதா சார்..? அதெல்லாம் ரிலையன்ஸ் வாங்கிட்டாங்க நேரா போயி லெஃப்டில் திரும்பினா 10 மாடி ரிலையன்ஸ் ஃபிரெஷ் வரும் அங்க போங்க!”

————-

“என்னங்க இது அடுத்த ஸ்டாப்பில் இறங்க ₹50 ரூபாய் டிக்கெட்டா கவர்மெண்ட் பஸ்ஸில் இப்படியா கொள்ளையடிப்பிங்க? இந்தாப்பா இது கவர்மெண்ட் பஸ்ஸா,இல்ல கால் டாக்ஸியா?”

“இல்ல! இதை டாடா கம்பெனி வாங்கிட்டாங்க.இதான் கட்டணம் இருந்தா ஏறு இல்ல பொடி நடையா நடந்து போ.!”

————-

TN Register Dept.
TN Register Dept.

“ரிஜிஸ்டிரர் சார் வீடு வாங்கினதுக்கு பத்திரம் பதிய எதுக்கு அம்பானி க்ரூப் கம்பெனிக்கு போகச் சொல்றிங்க..?”

“என்ன சார் விஷயம் தெரியாதா பத்திரப்பதிவுத்துறையை போன வாரம் அவங்க வாங்கிட்டாங்களே.!”
————-
“என்னது பிளாட்பார்ம் டிக்கெட் 500 ரூபாயா? டிரெயினில் சென்னை போகக் கூட அவ்வளவு ஆகாதே!”

“யாரு சொன்னா இப்போ சென்னைக்கு இரயில் டிக்கட் ₹6000 ரூபாய் இரயில்வேயை அனில் அம்பானி வாங்கிட்டாரு தெரியுமில்ல.!”

————-
“என்னங்க இது அநியாயமா இருக்கு மொபை

BSNL 1
BSNL 1

லுக்கு மினிமம் டாப் அப்பே ₹3000 ரூபாயா? பி.எஸ்.என்.எல் பேரை கெடுக்குறீங்களே!!”

“அய்யா இதை ஜியோ வாங்கி 4 நாளாகுது நாட்டில் இது ஒரு நெட்வொர்க் தான் இப்போ..! நாங்க சொல்றது தான் இப்போ சட்டம்.!”

————-
“என்னங்க இது எல்லா பேங்கும் மூடிட்டாங்க.!”

“பேங்கை ஃபுல்லா வேதாந்தா க்ரூப் வாங்கிடுச்சாம்.. ஒரே வங்கி.! ஊரெல்லாம் அதுதான். அது பேரு சங்கி.!”
————-
“பையனை ஸ்கூலில் எல்.கே.ஜி சேர்க்கணும்..!”

“அப்போ அதானி கம்பெனி ஷேர் 5 இலட்சத்துக்கு வாங்கிட்டு அதோட ஃப்ரூப் அனுப்புங்க நாளைக்கே அட்மிஷன் போட்டுடுவோம்..! ஏன்னா எல்லா ஸ்கூல், காலேஜையும் அதானி வாங்கிட்டாங்க.!”

————-

TNEB
TNEB

யாருப்பா நீ புதுசா கலர் யூனிஃபாரம்ல இருக்கே..?

“அம்மா எலக்டிரிக் ரீடிங் எடுக்க ரிலையன்ஸ் கம்பெனியில் இருந்து வந்துருக்கோம் மீட்டர் பாக்ஸை திறங்களேன்.!”

————-

“ஏன் அவரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போறாங்க?”

“பின்ன, என்னங்க.? பதாஞ்சலி மினரல் வாட்டர் வாங்காம வீட்டில் போர் போட்டுத் தண்ணி எடுத்துருக்கான்..!அரசாங்கம் சும்மா விடுமா!”

————-

Defence
Defence

“நீங்க இவ்வளவு குண்டா குள்ளமா இருக்கிங்க உங்களை எப்படி இராணுவத்தில் எடுத்தாங்க?”

“அட நாட்டு இராணுவத்தை தான் ரிலையன்ஸ் செக்யூரிட்டி சர்வீஸ் கிட்ட கொடுத்துட்டாங்களே..! பணம் இருந்தா யாரு வேணா இதில் சேரலாமே.!”

————-

இனி நீங்களும் சொல்லலாம்.,
சிரிப்பதற்கு மட்டுமல்ல..,இல்லை சிந்திப்பதற்கும்..!

வாசகர் பார்வை-க்காக
தொழிற் செல்வி. பா .பகிர்ந்த கற்பனைச் சித்திரம்


Share this News:

Leave a Reply