வேலையில்லா இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 2000 – காங்கிரஸ் அதிரடி!

Share this News:

பெங்களூரு (16 ஜன 2023): “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேலையில்லாத இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா 2000 ரூபாய் வழங்கப்படும்!” என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் மகளிர் மாநாட்டின் தொடக்க விழாவில் பிரியங்கா காந்தி பேசினார்.

மேலும், கர்நாடகா மாநிலத்தில் பெரும் ஊழல் நடந்து வருவதாகவும், பெண்களுக்காக மட்டுமே சிறப்பு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

மாநிலத்தில் மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. மேலும், அரசின் 1.5 லட்சம் கோடி பொதுப் பணம் திருடப் பட்டுள்ளதாகவும் பிரியங்கா கூறினார்.

சட்டசபை தேர்தலை நடத்தப்படும் இந்த மகளிர் மாநாட்டில், கிரஹ லக்ஷ்மி யோஜனா என்ற இந்த திட்டம் மாநிலத்தில் 1.5 கோடி குடும்பங்கள் பயனடையும் என்று மாநில காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, காங்கிரஸ் இந்த வாக்குறுதியை அளித்துள்ளது.

எரிவாயு விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் நிவாரணம் அளிக்கும் என்றும் காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *