மதுரை (16 ஜன 2023): முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்கு வந்து அழகிரியை சந்தித்து பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நாளை நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சென்று சந்தித்தார்.
டி.வி.எஸ். நகரில் உள்ள அழகிரி வீட்டில் அழகிரியை சந்தித்த உதயநிதி மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அழகிரி, பெரியப்பாவை பார்க்க என் தம்பி மகன் வந்துள்ளார் என சிரித்துக் கொண்டு பதிலளித்தார்.