முசாபர்பூர் (27 மே 2020): புலம் பெயர்கையில் இறந்த தாயை குழந்தை ஒன்று எழுப்பும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் கையில் பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உண்டானது. வழியில் உணவு இன்றியும் விபத்தில் சிக்கியும் சிலர் மரணம் அடைந்தனர். இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்களை இயக்க தொடக்கியது. இந்நிலையில் அஹமதாபாத்திலிருந்து கதிஹார் செல்லும் ரெயிலில் செல்லும்போது ஒரு பெண் இரயிலிலேயே உயிரிழந்துள்ளார்.
அந்த பெண்ணின் உடலை உடற்கூறாய்வுக்காக ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்லும் வரை முசாபர்பூர் இரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த பெண்ணின் குழந்தை அந்த தாய் இறந்தது தெரியாமல் எழுப்புகிற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா உயிரிழப்பை விட இதுபோன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிரிழப்பு ஏற்பட அரசின் கவனக்குறைவே காரணம் என்பதாக பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
https://www.facebook.com/inneram/videos/279785729870709/