புதுடெல்லி (31 மே 2021): எஸ்பிஐ வங்கியில் கணக்கு தொடங்கிய கிளை தவிர மற்ற கிளைகளிலும் பணம் எடுக்கும் உச்ச வரம்பினை எஸ்பிஐ அதிகரித்துள்ளது
கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களை ஆதரிக்கும் விதமாக, எஸ்பிஐ செக் அல்லது பணம் எடுக்கும் படிவம் மூலம் திரும்ப பெறும் உச்ச வரம்பினை செல்ப் செக் போட்டு எடுக்கும் தொகை வரம்பினை, ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே மற்றொரு ஆப்சனான வித்ட்ராவல் பார்ம் மூலமாக ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ளலாம். இதே மூன்றாம் தரப்பு நபர் செக் மூலமாக பணம் எடுக்கும் வரம்ப்பானது 50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல பார்ம் மூலமாக மூன்றாம் தரப்பினர் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக மூன்றாம் தரப்பினரின் கே ஒய் சி விவரங்கள் தரப்பட வேண்டும்.
எஸ்பிஐயின் இந்த அதிரடி மாற்றங்கள் செம்டம்பர் 30, 2021 வரையில் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.