புதுடெல்லி (09 டிச 2022): முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஒருங்கிணைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களின் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி செல்லுபடியாகும் என பல்வேறு உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.
இதன் காரணமாக முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஒருங்கிணைக்க வேண்டும் என மகளிர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது.
இந்த மனு மீது நடந்த விசாரணையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.