திருச்சூர் (18 ஜன 2020): பிரதமர் மோடியின் குடியுரிமை ஆவணங்களை காட்ட வேண்டி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்கபப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தில் மும்முரமாக உள்ளனர்.
இந்நிலையில் இந்நிலையில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் கல்லு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளார். இதில் பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றவரா? அப்படி பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.