காசிப்பூர் (16 மே 2021): உத்தரப்பிரதேசத்தில் ஒரு மயானத்தில் கொரோனா பாதித்து இறந்தோரின் உடல்கள்கொத்து கொத்தாக எரிக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால் மருத்துவமனை வாயிலிலேயே நோயாளிகள் இறக்கும் நிலை வடமாநிலங்களில் ஏற்படுகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையோரத்தில் சடலங்கள் மிதப்பதாக செய்திகள் வருகின்றன. இதற்கிடையேஉத்தரப்பிரதேசத்தில் காசிப்பூரில் ஒரு மயானத்தில் கொத்து கொத்தாக சடலங்கள் எரியும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
लाखों आम हिंदुस्तानियों की मौत पर अब तक एक शोक संदेश , एक भी संवेदना देखी आपने ? क्या संवेदना पाना भी सिर्फ़ ख़ास का ही अधिकार है ? pic.twitter.com/f04SjoQzsL
— Vinod Kapri (@vinodkapri) May 15, 2021