மும்பை (07 ஏப் 2020): டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார்? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முகநூல் பதிவில் மகாராஷ்டிர மக்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை உணராமல் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பிரச்னையை வைத்து குறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த மாதத்தில் மகாராஷ்டிரத்தில் இரு இடங்களில் இதேபோன்ற மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், அனுமதி அளிக்கப்படாத நிலையில் மாநாடு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைப்பாளா்களுக்கு மகாராஷ்டிர போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். என்று அவர் தெரிவித்தார்.