இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!

Share this News:

வாஷிங்டன் (07 ஏப் 2020): மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு சர்ப்பரைஸ் காத்திருக்கிறது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் அமெரிக்கா பெரும் பாதிப்பை கண்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா இந்த நோயை கட்டுப்படுத்துவதில் திணறி வருகிறது.

இந்நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியாவை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். “எங்களுக்கான மருந்தை அனுமதித்தால் நன்றாக இருக்கும் என மோடியிடம் கூறியிருந்தேன். அவர் எனது கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அமெரிக்காவுடனான இந்திய உறவு சிறப்பாகவே உள்ளது. ஒருவேளை அவர் அனுமதிக்கவில்லை என்றாலும் பராவாயில்லை. ஆனால், அதற்கான பதிலடி இருக்கக்கூடும்.” என கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருவதால் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தகக்து.


Share this News:

Leave a Reply