மற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் – கொதிக்கும் நெட்டிசன்கள்!

Share this News:

ஐதராபாத் (06 டிச 2019): இன்றைய ஹாட் டாப்பிக் ஐதராபாத் என்கவுண்டர்தான்.

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில், எதிர்பாராத திருப்பமாக இந்த சம்பவத்திற்கு காரணமாக குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப் பட்டனர்.

இந்த என்கவுண்டர் சம்பவம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒருதரப்பார் இதனை ஆதரித்தும் சிலர் இதனை எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொடூரமாக கொல்லப் பட்ட கொலையாளிகளுக்கு ஏன் இந்த தண்டனை வழங்கப் படவில்லை? என்றும் பாதிக்கப் பட்ட பெண் முஸ்லிம் என்பதாலும் குற்றவாளிகள் பாஜகவினர் என்பதாலுமா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

அதேபோல பொள்ளாச்சியில் பல பெண்களை சீரழித்த குற்றவாளிகள் இன்றும் மக்களோடு மக்களாக உலா வருகின்றனர் அவர்களுக்கு இதே தண்டனை வழங்கப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

அதேவேளை தெலுங்கானா போலீசுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


Share this News:

Leave a Reply