6 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் பன்றிக் காய்ச்சல்!

Share this News:

புதுடெல்லி (25 பிப் 2020): உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் ஒரே நேரத்தில் பன்றிக்‍ காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டிருப்பது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டேவை, அவரது அறையில் சந்தித்த, நீதிபதி திரு.T.Y.சந்திர சூட், தாம் உட்பட நீதிபதிகள் 6 பேர், H1N1 பன்றி காய்ச்சல் வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளதாக கூறினார். பன்றி காய்ச்சல் சரியாகும்வரை, தங்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர், தடுப்பூசி போட்டுக்‍கொள்ள உத்தரவிடுமாறும் அவர் கோரிக்‍கை விடுத்தார். இவ்விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply