ஸ்மார்ட் கார்டு மூலம் கோடி கணக்கில் மோசடி – சந்தி சிரிக்கும் குஜராத் மாடல்!

Share this News:

அஹமதாபாத் (16 பிப் 2020): போலி கைரேகை மூலம் குஜராத்தில் ரேசன் பொருட்களை கொள்ளையடித்து மோசடியில் ஈடுபட்டது சைபர் க்ரைம் போலிஸாரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2014ல் பிரதமராக மோடி பதவியேற்கும் முன்பு குஜராத் மாடல் என்றும், மோடியை முன்னிலைப் படுத்தியும் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. மேலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேசன் என்பதன்  ஒரு பகுதியாக, குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை அறிமுகம் செய்து அதன் மூலம் மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது தொடங்கப்பட்டிருந்தாலும் வடமாநிலங்களில் இந்த ஸ்மார்ட் ரேசன் திட்டம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருகிறது.

அந்தவகையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் குஜராத் மாநிலத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், ஸ்மார்ட் கார்டு அடிப்படையில் மக்களின் விரல் ரேகைகளை மட்டும் பதிவு செய்து ரேசன் பொருட்கள் வழங்கி வந்துள்ளதாக சைபர் க்ரைம் போலிஸார் அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், குஜராத்தில் உள்ள ரேசன் கடை பணியாளர்கள், பயனாளர்களின் கைரேகை அச்சுகளை போலியாக உருவாக்கி, சட்டவிரோதமாக ரேசன் பொருட்களை தனியாருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சுமார் 1.27 கோடி ஸ்மார்ட் கார்டு பயனாளர்களின் கைரேகைகளை வைத்து கோடிக் கணக்கில் கொள்ளையடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சூரத் நகரில் உள்ள நியாய விலைக் கடையில் இருந்து சுமார் 1,100 பேரின் கைரேகை அச்சுகளை சைபர் க்ரைம் போலிஸார் கைப்பற்றியுள்ளனர். பிரதமர் மோடியின் சகோதரரான பிரகாலாத் மோடியே குஜராத் மாநிலத்தின் ரேசன் கடை உரிமையாளர் சங்கத் தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

இந்த கைரேகை அச்சுகளை போலியாக உருவாக்கி ரேசன் பொருட்கள் மட்டுமல்லாது மக்களின் பண பரிவர்த்தனை, ரகசிய கோப்புகள் என பலவற்றையும் சுலபமாக திருடி தனியாருக்கு விற்க முடியும் என ஏற்கெனவே மும்பையைச் சேர்ந்த ஜூட் டிசோசா என்ற தடயவியல் அதிகாரி எச்சரித்திருந்தார். அது இப்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply