அடுத்த பிரதம வேட்பாளராகும் முதல்வர் ஸ்டாலின் – தேசிய அரசியலில் பரபரப்பு!

Share this News:

சென்னை (02 மார்ச் 2023): இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தேசிய அளவில் உள்ள முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஸடாலினை வாழ்த்திப் பேசினர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்டாலின் பிரதமரானதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய பரூக் அப்துல்லா, தமிழக முதல்வரை தேசிய அரசியலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களிலும், 2006 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கார்கே “பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். யார் தலைமை ஏற்பார்கள், யார் பிரதமர் என்று நான் கூறவில்லை. அது கேள்வியல்ல, ஒற்றுமையாகப் போராட விரும்புகிறோம். இதுவே எங்கள் விருப்பம்’- என்று கார்கே தெரிவித்துள்ளார்.

இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply