புதுடெல்லி (13 டிச 2022): மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகையை ரத்து செய்த ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைமையில், கல்லூரி மாணவர்கள் டெல்லி சாஸ்திரி பவனுக்கு பேரணியாகச் சென்றனர்.
“பல மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்!” என மாணவர் அமைப்புகள் தெரிவித்தன.
சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி – நவாஸ்கனி கண்டனம்!
சாஸ்திரி பவனுக்கு சென்ற பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தி, போராட்டக் காரர்களை கைது செய்து அப்புறப் படுத்தினர்.
சிறுபான்மையின மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு ரத்து செய்கிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த நாள் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.