முக்கிய சாலையில் இளம் பெண்கள் நடனம் – காவல்துறை நடவடிக்கை: வீடியோ

Share this News:

காஜியாபாத் (13 டிச 2022): காஜியாபாத் முக்கிய சாலையில் நடனமாடியதாக இரண்டு இளம் பெண்கள் உட்பட 3 பேரை காசியாபாத் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

வீடியோவில், இரண்டு இளம் பெண்கள் மற்றும் ஒரு இளைஞன் இரவில் தங்கள் காரை சாலையில் நிறுத்திவிட்டு அதன் பானட்டில் கேக் வெட்டிய பிறகு பல பாடல்களுக்கு நடனமாடுவதைக் காணலாம்.

மேம்பால சாலையில் காரை நிறுத்தி பிறந்தநாள் விழா நடத்தியதற்காக போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததோடு, ரூ 10000 அபராதமும் விதித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply