முத்தலாக்கை ஒழித்ததாக சொல்லும் பாஜக என்னை விவாகரத்து செய்யுமாறு என் கணவரை வலியுறுத்துகிறது என்று பாஜக எம்.பி சௌமித்ரா மனைவி சுஜாதா தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. சௌமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான் பஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, சுஜாதாவுக்கு சௌமித்ரா கான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள சுஜாதா “தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் நுழைந்தால், அது உறவுகளுக்கு நல்லதல்ல. எனக்கு எதிராகத் தூண்டிவிடும் பாஜகவின் தவறான நபர்களுடன் சௌமித்ரா உள்ளார். முத்தலாக்கை ஒழித்ததாக கூறும் கட்சியே இன்று என்னை விவகாரத்து செய்யுமாறு சௌமித்ராவை வலியுறுத்துகிறது” என்றார்.