பாஜக பி டீம் – உறுதி படுத்துகிறதா ஆம் ஆத்மி?

Share this News:

புதுடெல்லி (21 பிப் 2020): ஆம் ஆத்மி கட்சி தற்போது பாஜக எதிர்ப்பிலிருந்து சற்று விலகி இருப்பதாகவே சமீபத்திய நகர்வுகள் தெளிவு படுத்துகின்றன.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஹனுமான் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. கடவுள் நம்பிக்கை என்பது அவரவரவர் விருப்பம் என்பதால் இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது.

ஆனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவரப் பரத்வாஜ் கூறியிருக்கும் கருத்துதான் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

‘பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அங்கு கோவில் கட்டும் பணிகளுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவரப் பரத்வாஜ், “அயோத்தி ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் ஹனுமான் கோவிலும் கட்ட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். பாபர் மசூதி – ராமர் கோவில் விவகாரம் நீதிமன்ற தீர்ப்பை அடுத்தும், முஸ்லிம்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் பாஜகவை எதிர்த்து வாக்கு பெற்ற கட்சியான ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ இவ்வாறு கூறியிருப்பது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


Share this News:

Leave a Reply