டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சிறுவனாம் – அதிர்ச்சி தகவல்!

Share this News:

புதுடெல்லி (31 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம் பாருக் என்பவர் காயம் அடைந்தார். அவர் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் டெல்லி மேலும் பரபரப்பு அடைந்தது. துப்பாக்கிதாரி ராம் பகத் கோபாலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே துப்பாக்கிதாரி 18 வயது நிரம்பாதவன் என்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் என்ற பதற வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கியால் சுட்ட ராம் பகத் கோபாலின் பெற்றோர் அவனது ஆதார், பள்ளி சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீசார் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது இப்படியிருக்க துப்பாக்கிச் சூடு நடத்தியவன் என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply