மாட்டுக்கறிக்காக பசுவை விற்ற கோவில் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Share this News:

ஐதராபாத் (26 மார்ச் 2022): பசுவை இறைச்சிக்காக விற்ற கோவில் தலைவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் கோமட்வாடியில் அமைந்துள்ள போச்சம்மா கோயிலின் தலைவர் டி.பிரேம் குமார் எனப்வர், கோயிலின் பசுவை அங்குள்ள உள்ள இறைச்சிக் கூடத்துக்கு விற்றுள்ளார். இந்த குற்றத்தில் குழு உறுப்பினர் எட்லா மகேந்தர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அகில பாரத கௌ சேவா அறக்கட்டளையின் பிரதிநிதி ஏ.பால கிருஷ்ணா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் டபீர்புரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Share this News:

Leave a Reply