கர்நாடகாவில் நீடிக்கும் பதற்றம்!

Share this News:

கர்நாடகா (26 அக் 2022): கர்நாடகா ஷிமோகா மாவட்டத்தில் தனித்தனி சம்பவங்களில் இருவர் தாக்கப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தொட்டபேட்டாவில் மார்க்கெட் ஃபௌசன், ஆசு என்கிற அசார் மற்றும் ஃபராஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான குமார், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மார்க்கெட் ஃபவுசன் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் என்னை கடுமையாக தாக்கினார்கள், அவர்கள் என் முகத்தில் அடித்தார்கள். தலையில் இரத்தப்போக்கு ஏற்பட்டு, நான் தப்பிச் செல்ல முயன்றேன் ஆனால் என்னை துரத்திச் சென்று தாக்கினர்’ என்று தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு நபர் கூறியதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அச்சப்படத் தேவையில்லை என்றும் ஷிமோகா எஸ்பிஜி மிதுன் குமார் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, வன்முறை சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர், தேவையானதை அவர்கள் செய்வார்கள் என தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply