உலக அளவில் முடங்கியது வாட்ஸ் அப்!

Share this News:

புதுடெல்லி (25 அக் 2022): வாட்ஸ் அப் உலக அளவில் முடங்கியுள்ளது. சிக்கலை ஒப்புக்கொண்ட மெட்டா செய்தித் தொடர்பாளர், ‘முடிந்தவரை விரைவாக’ சேவைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

மேலும் “சிலருக்கு தற்போது செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம், மேலும் அனைவருக்கும் வாட்ஸ்அப்பை விரைவில் மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Realtime Monitor Downdetector இன் கூற்றுப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ் அப் முடக்கம் பயனர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. ஆயிரக்கணக்கான பயனர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த உலகளாவிய செயலிழப்பு விரைவில் சரிசெய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply