கொரோனா தடுப்பூசி யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது? -பாரத் பயோடெக் விளக்கம்!

Share this News:

புதுடெல்லி (19 ஜன 2021): பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை யார் பயன்படுத்தலாம், யார் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரை அணுகிய பின்னரே தடுப்பூசி போட வேண்டும்.  கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இந்தத் தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது. மற்றொரு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் கோவாசின் எடுத்துக் கொள்ளக்கூடாது.

தடுப்பூசி நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கியதிலிருந்து தடுப்பூசி பெற்றவர்களில் சிலர், சில பக்கவிளைவுகளைச் சந்தித்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பாரத் பயோடெக் நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கோவிட் தடுப்பூசி பெற்றவர்களில் சிலர் இறந்துள்ளனர், ஆனால் மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.

திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, நாட்டில் 3,81,305 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply