இந்தியா வந்தார் ட்ரம்ப் – பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!

Share this News:

அஹமதாபாத் (24 பிப் 2020): இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

ஆமதாபாத் விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் 11.40க்கு வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோரை பிரதமர் மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்றனர். இசைக் கருவிகள் முழங்க, பல்வேறு கலாசார நடன நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க அதிபரின் வாகனத்தின் மூலம் தலைவர்கள் சபர்மதி ஆசிரமம் புறப்பட்டுச் சென்றனர்.


Share this News:

Leave a Reply