கோலாலம்பூர் (24 பிப் 2020): மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
94 வயதான மகாதீர் முகம்மது, உலகின் அதிக வயதுடைய பிரதமர் என்ற பெயரையும் பெற்றவர். இந்நிலையில் இன்று அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை மன்னரிடம் இன்று ஒப்படைக்கவுள்ளார்.
2018 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த மகாதீர் முகம்மதுவின் திடீர் ராஜினாமா உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் சார்ந்த பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.