வாஷிங்டன் (23 அக் 2020): இந்தியா அசுத்தமான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க தேர்தல் விதிப்படி குறைந்தது 3.5 கோடி மக்கள் ஏற்கனவே வாக்களித்து விட்டனர். இது மொத்த வாக்குகளில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் ஆகும்
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் அவரது ஜனநாயக போட்டியாளரான ஜோ பிடனும் இன்று தங்கள் இரண்டாவது மற்றும் இறுதி விவாதத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ட்ரம்ப் இந்தியா சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக விமர்சித்தார், குறிப்பாக இந்தியா அசுத்தமான நாடு என கூறியது இந்தியர்களை ஆவேசப்பட வைத்துள்ளது.
அதிபர் ட்ரம்பை பிரதமர் தனது நண்பர் என கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் அமைதி காப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.