புதுடெல்லி (22 அக் 2020): திகார் சிறையில் தனிமையில் கொடுமைப் படுத்தப்படுவதாக ஜே.என்.யூ முன்னாள் மாணவர் ஒமர் காலித் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஒமர் காலித் கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் நீதிபதியிடம் அளித்த விளக்கத்தில், உமர் காலித் தனது செல்லுக்கு வெளியே செல்லவோ யாருடனும் பேசவோ,பாரக்கவோ அனுமதிக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனிமைச் சிறையில் வசிப்பதாக நிதிபதியிடம் தெரிவித்தார். .தனிமை சிறையில் உள்ளதால் தனக்கு மன மற்றும் உடல் ரீதியான கஷ்டங்களை ஏற்படுத்துவதாக உமர் காலித் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனை விசாரித்த நீதிபதி, சிறை கண்காணிப்பாளரை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் உமர் காலித்தின் நீதிமன்ற காவலை மேலும் 30 நாட்களுக்கு நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.