புதுடெல்லி (11 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ளளார்.
அவரது வருகையை வெள்ளை மாளிகை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான தூதரகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஜனவரி 16ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.