டெல்லி தேர்தல் அப்டேட்: ஆம் ஆத்மி 54 இடங்களில் முன்னிலை!

Share this News:

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 54 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

இதில் ஆம் ஆத்மி 54இடங்களிலும் பாஜக 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட கணக்கை தொடங்கவில்லை.

முன்னதாக பாஜக 20 இடங்களை தொடட்டிருந்தது. பிறகு அக்கட்சி சரிவை தொடங்கியது.


Share this News:

Leave a Reply