புதுடெல்லி (21 ஜன 2021): ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யக்கோரி #ArrestTraitorArnab என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் டிவியின் டிஆர்பி மதிப்பீட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துள்ளார், என்று வெளியான அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் காட்டுகின்றன.
பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுடனான உரையாடல்கள் மூலம், புல்வாமா தாக்குதலை வேறு எந்த ஊடகங்களையும் விட முன்னதாக வெளியிட முடிந்ததையும் அதன்முலம் டிஆர்பி ரேட்டிங்கில் வெற்றி பிற முடிந்ததையும் அர்னாபின் உரையாடல்கள் உறுதிப்படுத்துகின்றன.
‘தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை அர்னாப் எப்படி அறிந்திருந்தார்?’ என்று மோடி அரசுக்கு எதிர் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.. காங்கிரசும் சிவசேனாவும் அர்னாபின் வாட்ஸ்அப் உரையாடல்களை கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி, சஷி தரூர் உள்ளிட்டவர்கள் கோரியுள்ளார்.
அர்னாபின் வாட்ஸ்அப் உரையாடல்கள் தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன என்று காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ரன்தீப் சர்ஜ்வாலா தெரிவித்தார். அர்னாப் நீதிமன்ற தற்காப்புக்கு உட்படுத்தப்படுவாரா? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. . நாடு குறித்த உள் பாதுகாப்பு தகவல்களை கசிய விட்டதற்காக அர்னாப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனா கோரியுள்ளது.
இந்நிலையில்தான் #ArrestTraitorArnab என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.