பாகிஸ்தானில் இரண்டு இந்திய உயர் அதிகாரிகள் மிஸ்ஸிங்!

Share this News:

இஸ்லாமாபாத் (15 ஜூன் 2020): இஸ்லாமாபாத்தில் இரண்டு இந்திய உயர் அதிகாரிகளை காணவில்லை என்று செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ திங்களன்று தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் விசா பிரிவில் பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் உள்ள பல உயர்மட்ட இந்திய தூதரக அதிகாரிளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தித்தும், அதிகப்படியான கண்காணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News: