இந்தியாவில் இரண்டு செய்தி சேனல்களுக்குத் தடை!

Share this News:

புதுடெல்லி (06 மார்ச் 2020): டெல்லி கலவர செய்தியை தவறாக ஒளிபரப்பியதாக மலையாள மொழியின் இரண்டு சேனல்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மலையாளத்தில் பிரபலமான செய்தி சேனல்கள் ஆசியாநெட் மற்றும் மீடியா ஒன். இவை இரண்டு சேனல்களிலும், ஒளிபரப்பான செய்தி அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தவறான செய்திகள் எனப் பட்டியலிட்டுள்ள அமைச்சகம், இதுபற்றிய விளக்கங்களுடன், ஒளிபரப்புக்கு இரு நாள்கள் – வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி வரை – தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஆசியாநெட் நியூஸ் டிவி, மீடியா ஒன் டிவி ஆகிய இரு மலையாள மொழி செய்தி சேனல்களும் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளன.


Share this News:

Leave a Reply