இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 7 மெட்ரிக் டன் மருத்துவ பொருட்கள் உதவி!

Share this News:

துபாய் (02 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 7 மெட்ரிக் டன் எடையுள்ள மருந்து பொருட்களை அனுப்பி சனிக்கிழமை அன்று வைத்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் டாக்டர் அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா கூறியதாவது:

“கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக போராடும் நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தங்களது முழு ஆதரவை வழங்கி வருகிறது.

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பல ஆண்டுகளாக நிலவி வரும் சகோதரத்துவ உறவை மேம்படுத்தும் வகையிலும் அதனை அங்கீகரிக்கும் வகையிலும் மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளோம். இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள மருத்துவ உதவி சுமார் 7000 மருத்துவ நிபுணர்களுக்கு உதவியாக இருக்கும்.

COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவது உலகளாவிய கவலையாக மாறியுள்ளது, மேலும் வைரஸைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் துணை நிற்கும்.

இன்றுவரை, ஐக்கிய அரபு அமீரகம் 34 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 348 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது, இது 348,000 மருத்துவ நிபுணர்களுக்கு உதவிக் கரமாக இருக்கும்” என்றார்.


Share this News: