உள்நாட்டு விமான கட்டணம் 10 ஆயிரம் வரை அதிகரிப்பு!

Share this News:

புதுடெல்லி (21 மே 2020): இந்தியாவில் உள் நாட்டு விமான கட்டணம் 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு அளவைப் பொறுத்து பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது முடக்கம் தளர்வு அறிவிக்கப்பட்ட பின், உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு இன்று காலை தொடங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே உள்நாட்டு விமான பயண கட்டணம் குறைந்தபட்சம் 3500 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம். மூன்றில் ஒரு பங்கு விமானம் மெட்ரோ நகரங்களுக்கு இயக்கப்படும் என்று உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.


Share this News: