ஹஜ் 2021 குறித்து மத்திய அமைச்சர் புதிய தகவல்!

Share this News:

புதுடெல்லி (19 அக் 2020): 2021 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை சர்வதேச வழிகாட்டுதல்களின்படி வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது ஆகும். வருகிற 2021ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் பற்றிய முக்கிய காரணிகளை முடிவு செய்வதற்காக உயர்மட்ட அளவிலான கூட்டம் ஒன்று இன்று நடந்தது. இதில், மத்திய சிறுபான்மையோர் அமைச்சர் முக்தார் நக்வி கலந்து கொண்டார்.

கூட்டத்தின் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 2021ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து, இதுபற்றிய அனைத்து இறுதி முடிவுகளும், சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி நடைபெறும் என்று கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *