சென்னை (19 அக் 2020) : 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேயற்றப்பட்டுள்ளார் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “விஜய் சேதுபதி தமிழினத்தின் கோரிக்கையைப் புறந்தள்ளினார்.
மு.முரளிதரன் விஜய்சேதுபதியைப் புறந்தள்ளினார்.
அவர் ‘800’ படத்தில் நடிப்பதிலிருந்து வெளியேறவில்லை; வெளியேற்றப்பட்டார்.
அவர்,மகிழ்ச்சியாய் அல்ல; விரக்தியாய் “நன்றிவணக்கம்” என்கிறார்.
இது அவருக்குநேர்ந்த அவமதிப்பு. என்று திருமா தெரிவித்துள்ளார்.