சென்னை (19 அக் 2020): இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு தயாராகும் 800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வந்தனர். டிவிட்டரிலும் ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
இதனைத்தொடர்ந்து 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி.. வணக்கம் 🙏🏻 pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020
இந்நிலையில் 800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் விஜய் சேதுபதி விலகலை உறுதிப்படுத்தவில்லை.