லக்னோ (15 ஆக 2021): உத்தரபிரதேச அரசு முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு தடை விதித்துள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் பரவல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு தடை விக்கப்பட்டுள்ளது. அதேவேளை வீடுகளில் நடத்தப்படும் ‘தஜியா’ மற்றும் ‘மஜாலிஸ்’ ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் நிர்வாகம் சனிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது, மொஹர்ரம் சமயத்தில் எந்த மத ஊர்வலங்களையும் எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட அதிகாரிகளை யோகி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.