உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

Share this News:

கட்வா (06 அக் 2022): உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கட்வாலில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

திருமண நிகழ்வுக்கு குடும்பத்தினர் சென்ற பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, திரௌபதி தண்டா பனிச்சரிவில் சிக்கிய 41 பேர் கொண்ட குழுவில் 15 பேர் மீட்கப்பட்டனர். 16 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply