இடுக்கி (21 டிச 2020): கேரளா மாநிலம் வாகமனில் இரவு விருந்து என்ற பெயரில் போதைப்பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக இளம் பெண் உட்பட 60 பேரை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த விடுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட ஏராளாமான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதாவர்களில் தோடுபுசாவைச் சேர்ந்த அஜ்மல் (30), மலப்புரத்தைச் சேர்ந்த மெஹர் ஷெரின் (26), எடப்பலைச் சேர்ந்த நபில் (36), சல்மான் (38), அஜய் (41), கோழிக்கோட்டைச் சேர்ந்த சவுகத் (36), காசர்கோட்டைச் சேர்ந்த முகமது ரஷீத் (31), சாவக்காட்டைச் சேர்ந்த நிஷாத். (36) மற்றும் திரிபுனிதுராவில் வசிக்கும் பிராஸ்டி விஸ்வாஸ் (23). ஆகியோர் முக்கியமானவர்கள்.