லக்னோ (18 ஜன 2023): உத்திர பிரதேசத்தின் பரபரப்பான சாலையில் இருசக்கர வாகனத்தில் காதல் ஜோடிகள் கட்டிப்பிடித்தபடி லூட்டியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் இந்த காதல் ஜோடிகள் இரு சக்கர வாகனத்தில் கட்டிப்பிடித்தபடி லூட்டியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த லக்னோ போலீசார் தற்போது அந்த காதல் ஜோடிகளை தேடி வருகின்றனர்.
காதல் ஜோடிகளின் பின்னால் சென்ற வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கினர்.
UP: In Lucknow's busiest area Hazratganj, two youngsters seen on a bike during the Road Safety Week!@Uppolice @uptrafficpolice @lkopolice pic.twitter.com/h5wXrclcg3
— सिया चतुर्वेदी (@Siachaturvedi2) January 18, 2023
லக்னோ மத்திய மண்டலத்தின் துணை போலீஸ் கமிஷனர் அபர்ணா ரஜத் கௌஷிக், இந்த வீடியோ லக்னோவில் இருந்து ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார். காதல் ஜோடியை பிடிக்க இரண்டு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இருவரையும் பிடிக்க அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.