லக்னோ (02 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் இன்று(ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், இருவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீவத்சவா கையில் பலத்த காயமுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டு கொல்லப்பட்ட ரஞ்சித், ஹிந்து அமைப்பை துவங்குவதற்கு முன்னர், சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். முன்னாள் முதல்வர் அகிலேஷூடன் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.