வாஷிங்டன் (29 ஏப் 2020): ட்விட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்ந்து வந்த வெள்ளை மாளிகை தற்போது அதிலிருந்து விலகியுள்ளது.
22 மில்லியன் பின் தொடர்பாளர்களை கொண்ட வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் அலுவலகம் ஆகிய டுவிட்டர் கணக்குகளை பின் தொடர்ந்திருந்தது.
இந்நிலையில், தற்போது மோடி, ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கணக்குகளை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளது.. தற்போது வெறும் 13 கணக்குகளை மட்டுமே பின்தொடர்கிறது. அவை அனைத்தும் அமெரிக்க நிர்வாகத்திற்கும், அதிபர் டிரம்புக்கும் தொடர்புடையவை ஆகும்
சமீபத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கோரிய அமெரிக்காவுக்காக இந்தியா அம்மருந்துக்கு விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.