நியூயார்க் (29 ஜூலை 2021): ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியின் செயல்திறன் ஆறு மாதங்களில் 96 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாகக் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வில், ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் அளவு இரண்டாவது டோஸுக்குப் பிறகு முதல் இரண்டு மாதங்களுக்குள் 96.2 சதவீதத்தை எட்டியுள்ளது, இது படிப்படியாகக் குறைந்து ஆறு மாதங்களில் 84 சதவீதமாகிறது.
44,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் நோயெதிர்ப்பு ஆய்வின்படி , ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் அதன் செயல்திறன் சுமார் ஆறு சதவீதம் குறைந்துள்ளது. இது தற்போதைய விகிதத்தில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், அதன் செயல்திறன் 18 மாதங்களுக்குள் 50 சதவீதமாகக் குறையக்கூடும். இது பூஸ்டர் ஷாட்களை அவசியமாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த ஆய்வில் உருமாறிய வைரஸ் அல்லது டெல்டா வைரஸில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.