ஜனாதிபதி மாளிகையில் கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்!

Share this News:

புதுடெல்லி (21ஏப் 2020): இந்திய ஜனாதிபதி தோட்டத்தில் தனது குடும்பத்துடன் வசிக்கும் ஒரு பெண் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது,

கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்ட அந்த பெண், சிகிச்சைக்காக ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அக்கம் பக்கத்திலுள்ள இரண்டு வீடுகளில் வசிக்கும் மொத்தம் 11 பேர், அவரது கணவர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன், வீட்டு தனிமைப்படுத்தலில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த பெண் ராஷ்டிரபதி பவனிலேயே பணிபுரியும் கீழ்-செயலாளர் மட்டத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அலுவலகத்தில் பணிபுரிந்தார். இதைக் கருத்தில் கொண்டு, அதிகாரி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதுமடுமல்லாமல் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் பணிபுரியும் 100 க்கும் மேற்பட்ட தோட்டக்காரர்கள், மற்றும் பிற பராமரிப்பாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply