ஜெய்ப்பூர் (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் சோதனை முறையான ரேப்பிட் கிட்ஸில் எடுக்கப்படும் முடிவுகள் தவறானவையாக உள்ளதால் இந்த முறையை நிறுத்தி வைக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பரிசோதனையை துரிதப்படுத்துவதற்காக ரேபிட் கிட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு பரிசோதனை தொடங்கி உள்ளது. இந்த கருவிகள் மூலம் உடனடியாக வைரஸ் தொற்றை கண்டறிய முடியும்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது. ரேபிட் கிட்டில் தவறான முடிவுகள் வெளியானதால் பரிசோதனை நிறுத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.