அலிகார் (06 டிச 2020): சண்டிகரில் இருந்து அலிகாருக்கு வந்த இளம் ஜோடியினர் திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில் நீதிமன்ற வாசலில் வைத்து முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகரை சேர்ந்த சோனு மாலிக் (21) என்ற முஸ்லீம் இளைஞரும், இந்து பெண்ணும் அலிகாருக்கு வந்து அங்கு உள்ள நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். இதற்கிடையே அவரை திருமணம் செய்ய வந்த இளம் பெண்னையும் போலீசார் இழுத்து சென்றுள்ளனர்.
சோனு மாலிக் (21) என்பவரை, நீதிமன்ற வளாகத்தில் மக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது, போலீசார் இழுத்துச் சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது .
சோனு மாலிக் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் , வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்.. அப்போது அந்த பெண், ” நான் மைனர் அல்ல, எனக்கு 21 வயது என்றும், தன்னை மதமாற்ற யாரும் கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அந்தப் பெண்ணை போலீசார் இழுத்துச்சென்றனர் . இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்படுகின்றன.