சென்னை (16 அக் 2019): “இதய நோய் அதிகரிக்க காரணம் குக்கரில் சமைத்து சாப்பிடுவதே” என்று ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குக்கரில் சமைப்பது ஆரோக்கியம் இல்லை எனவும், இதனால் இதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார், ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் கே கண்ணன்.
இதய நோய் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதனைத் தடுக்க முதலில் குக்கரில் சமைத்து சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் எனவும், குக்கர் வருவதற்கு முன்பு சாதத்தை எப்படி வடித்து சாப்பிடுவோமோ அதே போல்தான் சாப்பிட வேண்டும் எனவும் ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் கே.கண்ணன் கூறுகிறார்.
இப்பொழுதெல்லாம் பெரும்பாலான வீடுகளில், குக்கரில்தான் அரிசி, சாம்பார், குழம்பு ஆகியவைகளை சமைத்து சாப்பிடுகிறோம். இது ஒரு எளிமையான முறை என்பதால், குக்கரில் சமைப்பதையே விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.