கோவை (15 டிச 2022): கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை மொத்தமாக இழந்த இளம் பொறியாளர் ஒருவர், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்டவர் பெயர் சங்கர். 29 வயது வாலிபர். சடலத்தின் அருகே தற்கொலைக் கடிதம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதில் தனது சேமிப்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிய தொகையை இழந்ததால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சங்கர் பிணமாக கிடந்தார்.
ஆரம்பத்தில் அவர் சூதாட்டத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதித்து வந்த சங்கர், ஒரு கால கட்டத்திற்குப் பின்னர் தனது முழு சேமிப்பையும் இழந்தார்.
இழந்த சேமிப்பும், பணத்தை மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியும் தலைக்கேற, மீண்டும் பல்வேறு இடங்களில் கடன்களை வாங்கி ஆன்லைனில் அதிகமாக சூதாட ஆரம்பித்துள்ளார். சேமிப்பு மற்றும் கடனாகப் பெற்ற அனைத்துப் பணத்தையும் இழந்த விரக்தியில், இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இறந்த பொறியாளர் சங்கர், தம் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் ஏராளமாகக் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்ததாக விசாரணைக்குப் பின்னர் போலீசார் தெரிவித்தனர்.